தியாக தீபம் திலீபன் வாழ்வியல்
தியாக தீபத்தின் வாழ்வியலினை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்குடன் தியாக தீபம் திலீபன் வாழ்வியல் என்னும் வினாவிடைத் தொகுப்பு ஒன்று தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினர் குறிப்பாக சிறுவர்கள் திலீபன் மாமா மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாட்டால் அவர்கள் திலீபன் மாமாவின் வாழ்வியலினை கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பகத்தின் இப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாரதியார், வள்ளவர், காந்தி என்று இந்த மண்ணில் வாழாதவர்களின் வரலாற்றினை கற்கின்ற நாம் இம் மண்ணில் வாழ்ந்து எமக்காக ஈகைச்சாவடைந்த தியாக தீபத்தின் வரலாற்றினை பாடமாக படிப்பதில்லை. இவ்வாறு படிப்பதற்குரிய கையேடுகளும் இல்லை. அக் குறையினை சிறிதளவேனும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையிலும் இலகுவாக படித்து தெரிந்து கொள்ள கூடியவகையில் வினாக்களும் விடைகளுமாக அமைகின்றது இச் சிறிய கையேடு.
நல்லூர் தியாக தீபம் ஆவணக் காட்சியத்தில் எதிர்வரும் 24 புதன் கிழமை முதல் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற போகும் தியாக தீபம் வினாடிவினா போட்டிக்கான கையேடாகவும் இது அமையும்
இப்போட்டி பற்றிய தகவல்கள் மற்றும் இவ் வினா விடை கையேட்டினையும் நல்லூரில் அமையப் பெற்றுள்ள தியாக தீபம் ஆவணக் காட்சியத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் ஆவண காட்சியகத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை சென்றிருந்த வடமாகாண சபை அவைத்தலைவரும் , தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் , ஆவண காட்சியகத்தையும் பார்வையிட்டு , தியாக தீபம் திலீபன் வாழ்வியல் என்னும் வினாவிடைத் தொகுப்பினையும் சிறுவர்களுக்கு வழங்கி வைத்தார்.
Post a Comment