யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணொருவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொட்டடி பகுதியை சேர்ந்த தியாகராசா பிரேமாளினி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்

உறவினரின் வீட்டுக்கு சென்ற வேளை திடீர் சுகவீனமுற்ற நிலையில் , உறவினர்களால் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் , அங்கு மயக்கமடைந்துள்ளார். 

அதனை அடுத்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments