சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து கடத்திய பெண் யாழ் . விமான நிலையத்தில் கைது.


சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி இருந்தார். 

பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறிந்துள்ளனர். 

அதனை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்தர்கள் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். 

குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments