கொங்கோவில் இருவேறு படகு விபத்து: 193 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடிரசில் இந்த வாரம் நடந்த இரண்டு தனித் தனிப் படகு விபத்தில் குறைந்தது 193 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த விபத்துக்கள் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் வடமேற்கு ஈக்வடேர் மாகாணத்தில், சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் நடந்தன.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை லுகோலேலா பிரதேசத்தின் மலாங்கே கிராமத்திற்கு அருகிலுள்ள காங்கோ ஆற்றில் பயணித்தபோது கிட்டத்தட்ட 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்து கவிழ்ந்ததாக சமூக விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 209 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் 146 பேர் காணாமல் போனதாகவும் சமூக விவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
படகு எரிந்து கொண்டே கீழே சாய்ந்தது, தீ விபத்தில் கப்பலின் சரக்குகள் எரிந்து நாசமாகி, ஆற்றங்கரையில் இருந்த 15 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன என்று அறிக்கை கூறியது.
கடந்த புதன்கிழமை பசன்குசு பிரதேசத்தில் உள்ள ந்சோலோ மற்றும் கிரேட் மரிங்கா நதிகளின் சங்கமத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட படகு கவிழ்ந்ததில் குறைந்தது 86 பேர் இறந்தாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
படகில் அதிகளவானோரை ஏற்றுதல் மற்றும் இரவு பயணம் என்பவற்றால் இந்த விபத்து ஏற்பட்டது காணரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment