யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில்



 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5  மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.மேலும் சில கட்டட  தொகுதிகள் அமைக்கப்பட்டு  விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.







No comments