மனித பாவனைக்கு உதவாத 151 கிலோ மாட்டு இறச்சி அழிப்பு

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி  கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினர் மற்றும் சுகாதார பரிசோதரர்களால்

கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று, திருநகர் பகுதியில் ரகசியமான முறையில் கையாளப்பட்டு வந்த மாட்டு இறைச்சி மடுவம் சுற்றிவளைக்கப்பட்டு அங்கு காணப்பட்ட 151 கிலோ மாட்டு இறைச்சி   கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

கரைச்சிபிரதேச சபையின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

களவாக பிடிக்கப்படுகின்ற மாடுகள் சட்டவிரோதமான முறையில் குடிமக்கள் வாழுகின்ற பகுதிகளின் மத்தியில் எவ்வித அனுமதியும் சுகாதார முறையும் இன்றி வெட்டி விற்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

No comments