சர்வதேச நீதி கோரி கல்வியங்காட்டில் கையெழுத்து போராட்டம்


வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments