யாழில். ஹெரோயினுடன் காரில் பயணித்த இளைஞன் கைது
யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் காரில் பயணித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீதியில் பயணித்த காரை வழிமறித்து சோதனையிட்ட போது , காரில் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து காரை ஓட்டி வந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் காரினையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Post a Comment