அராலியை சேர்ந்த நபர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். 

மறுநாள் 25ஆம் திகதி அதிகாலை  3மணியளவில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தார்.


No comments