யாழில். 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் கைது


யாழ்ப்பாணத்தில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவடி சந்தியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீதியால் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இளைஞனை வழிமறித்து சோதனையிட்ட வேளையே , போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞனை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments