ஏன் குத்திமுறிகின்றன தமிழ் தரப்புக்கள்!
அரச நிதி மோசடியில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க வடகிழக்கிலிருந்தும் மலையகத்திலிருந்தும் தமிழ் தலைமைகள் பாடுபட்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் தமிழ் மக்களது வாக்கு வங்கியை தனதாக்க பெருமளவு நிதியை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கட்சி தலைவர்களிற்கு அள்ளிவீசியிருந்தார். குறிப்பாக கிழக்கிலும் வடக்கிலும் தமிழரசுக்கட்சியை சார்ந்தவர்களிற்கும் மதுபானச்சாலை அனுமதிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அனுர அரசு ரணிலுக்கு அரசாங்கமும், நீதியும் தண்டனையை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கையில் தென்னிலங்கை அரசியலை விமர்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்த வேண்டுமென்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே மலையக மக்களது தேயிலை தோட்ட சம்பள பிரச்சினைக்காக மௌனம் காத்த மலைய கட்சி தலைவர்கள் கொழும்பில் போராட்டங்களையும் ரணிலுக்காக முன்னெடுத்திருந்தமை விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது
Post a Comment