ரணில் பற்றி கருத்து வெளியிட்டவரிற்கு ஆப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட மருத்துவ அதிகாரி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர்; ருக்சான் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பதில் அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
ஓர் அரச அதிகாரியாகவும் மருத்துவ நெறிமுறைகளின்படியும், அவர் அவ்வாறு செய்ய முடியாது . குறிப்பாக ஒரு நோயாளியின் உடல்நிலை குறித்து மற்ற தரப்பினருக்கு தகவல்களை வெளியிடக்கூடாது.
அதுபோன்ற அறிக்கைகளை வெளியிட பிரதி பணிப்பாளருக்கு உரிமை இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி அவரது பிரிவில் சிகிச்சை பெறவில்லை என்றும் அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியும் ஒரு நோயாளி என்றும், அந்த நோயாளி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் பதில் பணிப்பாளர் தனக்குப் பொருத்தமற்ற ஒன்றைச் செய்துள்ளார் என்றும் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒரு நாட்டை ஆளத் தேவையான ஒரே விடயம் மூளைதான்” என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர்; ருக்சன் பெல்லனா, தெரிவித்துள்ளார்.
Post a Comment