மகிந்த பிச்சை:அனுர அட்டகாசம்!

 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டஙகள் வீதிக்கு தேங்காய் உடைப்பு மற்றும் சைக்கிள் ரயர் வழங்கல் என கோலாகலமாகியுள்ளது.

45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், கனகபுரம் பாடசாலையின் பின் வீதியை புனரமைக்கும் பணிகளை இன்று அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாம்.

இந்த ஆரம்ப விழாவில் கடற்றொழில் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் இணைப்புச் செயலாளர் மருங்கன் மோகன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் S. முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் S. முகுந்தன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிதன் மற்றும் பல முக்கிய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்திய “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” என்ற விசேட நடமாடும் சேவையின் தொடக்க விழா, கடற்றொழில் மற்றும் நீரிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.




No comments