ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர் குமணண் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டி இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
முன்னைய அரசாங்கங்கள் தமிழர்கள் குறித்து இனவெறியுடன் நடந்துகொண்டன நாங்கள் அவற்றை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தொடர்ச்சியாக் இந்த அரசாங்கம் தெரிவித்துவருகின்றது.
அது உண்மையானால் ஏன் இந்த அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர் குமணணை அவரது சமூக ஊடக பதிவுகளிற்காக விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குமணண் வடக்கு, கிழக்கிலிருந்து உருவான மிகவும் நம்பகதன்மை மிக்க புலனாய்வு செய்தியாளராக தன்னை தொடர்ச்சியாக நிரூபித்து வந்துள்ளார். மிகவும் உயர்ந்த தர ஆவணப்படுத்தலையும் அவர் முன்னெடுத்து வந்துள்ளார்.
உலகில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான மிகவும் விரோதமான ஒரு சூழலில் அவரும் அவரது சகாக்களும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர்.அவ்வாறான தொழில்சார் நிபுணர்களிற்கு உதவி தேவைப்படும் நேரத்தில் ஆதரவாக நிற்பது சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரினதும் கடமையாகும் என்றார்.
Post a Comment