யாழில். வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு


யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் , சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments