வவுனியாவில் அடாத்தாக காணி பிடிக்கும் காவல்துறை - பாராளுமனற்றில் அர்ச்சுனா
வவுனியா - ஓமந்தைப் காவல்துறையினா, காவல் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் காவல்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை காவல்துறையினர் கையகப்படுத்த முடியாது எனவும், அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத் தீர்மானத்தையும் மீறி காவல்துறையினர் மீண்டும் காணியினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை காவல்துறையினர் கையகப்படுத்த முடியாது எனவும், அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த காணிக்குள் ஓமந்தைப் காவல்துறை நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் ஓமந்தை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment