புதிய பங்காளிகளுடன் முன்னணி ஆர்ப்பாட்டம்!
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் பூரணை தினமான வியாழக்கிழமை (10) இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பங்காளி கட்சிகளையும் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காணி உரிமையாளர்கள் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், பங்காளிக்கட்சியான சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே நவாலி சென். பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று புதன்கிழமை (09) மாலை சென். பீட்டர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
சென்.பீட்டர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றதுடன் அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 135ற்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment