போதைப்பொருள் வியாபாரம்:கொழும்பிலும் கைது?

 


கொழும்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்  என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

ஏற்கனவே வடபுலத்தில் போதைபொருள் கடத்தலில் முப்படைகளும் தொடர்புபட்டுள்ள்தாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்நிலையில் கொழும்பிலும் காவல்துறையினர் போதைபொருள் வர்த்தகம் தொடர்பில் கைதாகியுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது

No comments