விபத்தில் இளைஞர் ஒருவர் பலி?



வவுனியா, பரசங்குளம் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் பலியாகியாள்ளர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


No comments