கடற்படை இரகசிய முகாம்:உண்மைகள் வெளிவருமா??

 




இலங்கை கடற்படையினர் கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்கு எதிராக முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் தேக்க நிலையிலுள்ளது.

இந்நிலையில் முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிசாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக  செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நபர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து முன்னதாக அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் முன்னதாகவும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலையில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கடற்படை மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


No comments