நட்ட ஈடு அல்லது மாற்று காணி:தீர்வு!
தையிட்டியில் தனியார் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கெதிரான மக்கள் போராட்டம் தொடர்கின்றது.
இந்நிலையில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு நஸ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (12) இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் “தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர், பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்.
அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நட்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோமெனவும் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment