செம்மணியில் அணையா விளக்கு!



செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடத்த பட வேண்டும் மற்றும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தி "அணையா விளக்குப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செம்மணியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை  நடைபெற்றிருந்தது.

படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின்  நீதியை கோருகின்றோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.

வுலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பத்தவர்கள் பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், மதகுரு தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழி விடயம் 1995ஆம் ஆண்டிலிருந்து பேசப்பட்டு வரும் விடயம். நீதி கோரப்பட்டு வரும் விடயம். 

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி நடத்தும் அறவழிப் போராட்டத்திற்கு "அணையா விளக்குப் போராட்டம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ம் திகதி முதல் மூன்று நாட்களிற்கு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கே அணையா விளக்கு என பெயரிடப்பட்டுள்ளது.அத்துடன் மூன்று நாட்களும் செம்மணியில் பொதுச்சுடரொன்றை  ஒளிரச்செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. 


No comments