நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது
நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி நண்பர்க்ளுடன் விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த வேளை , ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் , நண்பர் ஒருவர் மண் வெட்டி பிடியால் குறித்த நபரை தாக்கியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த நபரை , ஏனைய நண்பர்கள் அங்கிருந்து மீட்டு , மல்லாவி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment