காசா விவகாரத்தில் இஸ்ரேல் மீது நடவடிக்கை: இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் மிரட்டல்!


காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால் உறுதியான நடவடிக்கைகளை இஸ்ரேல் மீது எடுப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன.

அத்துடன் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி மற்றும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை, இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக ஐ.நா முன்னர் விவரித்தது.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் உள்ளது என இந்த மூன்று நாட்டுத் தலைவர்களும் இஸ்ரேலை விமர்த்சித்தனர்.

அத்துடன் காசாவில் துன்பத்தின் அளவு சகிக்க முடியாதது என்று அவர்கள் மேலும் கூறினர்.

காசா அழிக்கப்பட்டதால் விரக்தியடைந்து, பொதுமக்கள் இடம்பெயரத் தொடங்குவார்கள் என்று இஸ்ரேலிய அரசாங்க உறுப்பினர்கள் சமீபத்தில் பயன்படுத்திய அருவருப்பான மொழியையும் அவர்கள் கண்டித்தனர்.

நிரந்தர கட்டாய இடம்பெயர்வு சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் என்று அவர்கள் மேலும் கூறினர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலியர்களைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம். ஆனால் இந்த அதிகரிப்பு முற்றிலும் விகிதாசாரமற்றது என்று சர் கெய்ர், இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மார்க் கார்னி ஆகியோர் கூறினர்.

 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான "கொடூரமான தாக்குதலில்" பிடிபட்ட மீதமுள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிக்கை, போர்நிறுத்தத்திற்கான ஆதரவையும், இஸ்ரேலுடன் இணைந்து இருக்கும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை முன்மொழியும் "இரு-நாடு தீர்வை" செயல்படுத்துவதையும் மீண்டும் வலியுறுத்தியது.

இந்த செய்திக்கு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான இனப்படுகொலை தாக்குதலுக்கு மிகப்பெரிய பரிசை இந்த மூன்று தலைவர்களும் ர் கெய்ர், இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மார்க் கார்னி ஆகியோர் வழங்குகிறார்கள். அதே நேரத்தில் இதுபோன்ற அட்டூழியங்களை மேலும் அழைக்கிறார்கள் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்தார்.

11வாரகால முற்றுகைக்குப் பின்னர் காசா எல்லைப் பகுதிக்குள் அடிப்படை அளவு கொண்ட உணவை எடுத்துச் செல்ல அனுமதி அளிப்பதாக நெதன்யாகு  கூறினார்.

இஸ்ரேல் காசா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேலால் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்ட உதவி உணவுகளை ஏற்றிச் செல்லும் பாரவூர்திகளின் எண்ணிக்கை அவசரமாகத் தேவைப்படும் கடலில் ஒரு துளி என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நிவாரணத் தலைவரும் முன்னாள் பிரிட்டிஷ் இராஜதந்திரியுமான டாம் பிளெட்சர் கூறினார்.

ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர், இது காசா போரைத் தூண்டியது.

காசாவில் சுமார் 58 பணயக்கைதிகள் உள்ளனர், அவர்களில் 23 பேர் வரை உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் போது 53,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸால் நடத்தப்படும் காசாவின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

No comments