சிரியாவின் ஜனாதிபதி மாளிகை அருகே இஸ்ரேல் தாக்குதல்!


சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 

சிரிய அதிகாரிகள் ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறினால் தலையிடுவோம் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தன.

டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இஸ்ரேல் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது என்று பாதுகாப்பு அமைச்சர்  காட்ஸுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் நெதன்யாகு கூறினார்.

சிரிய ஆட்சிக்கு இது ஒரு தெளிவான செய்தி. டமாஸ்கஸின் தெற்கே சிரியப் படைகளை நிலைநிறுத்தவோ அல்லது ட்ரூஸ் சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

சிரியா அதிகாரிகளிடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

No comments