பிலிப்பைன்சில் பேருந்து விபத்து: 10 பேர் பலி!


வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 4 குழந்தைகளும் அங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஓட்டுநரிடம் விசாரணைகள் நடத்தியபோது அவர் ஸ்டெயரிங் வீலில் நித்திரைகொண்டுவிட்டார் எனக் கூறினார்.

கிட்டத்தட்ட 100 கி.மீசுபிக்-கிளார்க்-டார்லாக் விரைவுச் சாலையில் பேருந்துகள் பெரும்பாலும் மணிலாவிற்கும் சுற்றியுள்ள மாகாணங்களுக்கும் இடையில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்கின்றன. 

நேற்று வியாழக்கிழமை குடும்பங்கள் தொழிலாளர்கள் பயணம் செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்தப் பகுதியில் ஒரு பெரிய பேருந்து நிறுவனமான சாலிட் நார்த் பஸ்ஸையும், விபத்தில் சிக்கிய வாகனத்தை வைத்திருந்த நிறுவனத்தையும் போக்குவரத்துத் துறை இடைநிறுத்த உத்தரவிட்டது.

பேருந்து ஓட்டுநர் மீது பல கொலைகளுக்கு வழிவகுத்த பொறுப்பற்ற தன்மை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என்று காவல்துறையினர் ஏ.எவ்.பி செய்தி நிறுவனத்தினம் தெரிவித்தனர். பேருந்து நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments