தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது


ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments