இலங்கையில் பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை ரம்பொட, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த குறைந்தது 35 பேர் நுவரெலியா மற்றும் கொத்மலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமானது என்றும், அது கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகலுக்கு இயக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment