வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருத்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை கூரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்தார்.
அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment