பிள்ளையான் விடுதலையா?



நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது விவகாரம் எந்த வித தீர்வுகளுமின்றி கிடப்பில் போடப்பட்டள்ளது. முன்னதாக பிள்ளையான் கைது விவகாரம் அதிர்வலைகளை கிளப்பியிருந்த நிலையில் பின்னர் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக மாறிவருகின்றது. 

முன்னதாக  மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு  நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் திகதி ஒன்றை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பிள்ளையான் தாக்கல் செய்த குறித்த மனுவை ஜூன் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக ஏப்ரல் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பிள்ளையான் கைதாகியிருந்தார்.


No comments