லஞ்சம்:வடக்கில் தூள் பறத்தும் சிங்களம்!



யுத்த காலத்திலும் அதன் பின்னராகவும் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை வருமானம் ஈட்டும் பிரதேசமாக வடமாகாணமேயுள்ளது.விடுதலைப்புலிகளால் பேணிப்பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்களை தென்னிலங்கை தரப்புக்களுடன் சேர்ந்து அழிப்பதில் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டேவருகின்றன.

இந்நிலையில் நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இலங்கை காவல்துறை அதிகாரியொருவர் இலஞ்சம் வாங்கும் போது வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரியே கைதாகியுள்ள நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்;டுள்ளது. 

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் காணி பிணக்கொன்றை தீர்க்கவென நிலைய பொறுப்பதிகாரி 25 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது  இலஞ்சம் அல்லது  ஊழல்  பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 


No comments