மூழ்கியது:இறுதி யுத்த கால உலங்குவானூர்தியாம்!



இறுதி யுத்த காலத்தில் வடக்கில் முக்கிய பணிகளில் ஈடுபட்ட உலங்குவானூர்தியே விபத்தினில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது.

மாதுறுஓயா   நீர்த்தேக்கத்தில் நேற்று (09) விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தி இன்று (10) விமானப்படை மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

உலங்குவானூர்தியில் 12 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் திடீரென ஏற்பட்ட  தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்க முயற்சிக்கப்பட்ட போது மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளது.

 இச்சம்பவத்தில்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு இராணுவ விசேட  படையினரும் இரண்டு விமானப்படையினரும் பலியாகினர்

No comments