மகவை காப்பாற்றிய தாய்:வைரலான புகைப்படம்!




அன்னையர் தினமான இன்று ரம்பொடையில் நடந்த பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்த கடுமையான சோகத்திலும் ஒரு தாயின் தனது குழந்தை மீதான அதீத அன்பு மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  கிட்டத்தட்ட 120 அடிக்கும் மேல் பள்ளத்தில் விழுந்த பஸ் வண்டி, குறைந்தது 15 தொடக்கம் 20 தடவைகளாவது தலைகீழாக சுழன்று தூக்கி எறியப்பட்டு விழுந்திருக்கும். ஆனால் அந்த தாய் தனது பச்சிளம் குழந்தைக்கு ஒன்றும் ஆகாமல் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றியுள்ளார்.அதையும் தாண்டி அந்த குழந்தை நலமே உள்ளது என்கிறார்கள் வைத்தியர்கள்,.தனது மடியில் குழந்தையை இறுக்கமாக அணைத்து வைத்து காப்பாற்றிய தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments