மகாவலி அதிகாரசபையின் பிரிவு முகாமையாளர் கைது
20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற மகாவெலி அதிகார சபையின் முகாமையாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ரணவிரு அறக்கட்டளையின் கீழ் வீடு கட்டுவதற்காக முறைப்பாட்டாளருக்கு மகாவலி அதிகாரசபையின் மூலம் வழங்கப்பட்ட எத்துகல பகுதியில் உள்ள 20 பேர்ச் காணியின் ஒரு பகுதி சதுப்பு நிலமாக காணப்பட்டுள்ளது. அதற்கமைய மகாவலி அதிகார சபையின் கீழ் வேறு ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்து அனுமதிப்பத்திரம் வழங்கி உதவுவதற்காக சந்தேகநபர் இவ்வாறு 20,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மகாவலி அதிகாரசபையின் சேனபுர வலய முகாமைத்துவ காரியாலயத்துடன் இணைக்கப்பட்ட சந்துன்பிட்டிய பிரிவின் முகாமையாளர் காரியாலயத்தின் முகாமையாளராக கடமையாற்றி வரும் குறித்த நபர் சந்துன்பிட்டிய பிரிவு முகாமையாளர் காரியாலயத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Post a Comment