எதிர்கட்சிகள் ஒப்புக்கொண்ட நிலையில் பிரதமர் கார்னி தேர்தலில் வெற்றி பெற்றார்.


கனடாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின்  லிபரல் கட்சி குறிப்பிடக்கூடிய வெற்றியைப் பெறுவார்கள் எனக் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

லிபரல் கட்சியின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியதால் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஆனால் கன்சர்வேடிவ்கள் தங்கள் இடங்களின் எண்ணிக்கையை 20 க்கும் அதிகமாக அதிகரித்துவிட்டதாகக் கூறினர்.

நாடாளுமன்றில் 343 இடங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான  172 இடங்கள் தேவை.

கார்னியின் அரசாங்கத்தை அமைத்தாலும் பெரும்பாண்மை கிடைக்குமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவரவில்லை.

லிபரல் கட்சியினரின் வாக்குப் பங்கு 43 சதவீதத்திற்கு சற்று அதிகமாக உள்ளது. அதிகாலை 3 மணி உள்ளூர் நிலவரப்படி, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 172 இடங்களை விட 167 இடங்களில் அவர்கள் முன்னிலை வகிக்கின்றனர் அல்லது தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி டிரம்ப் நம்மை உடைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என பிரதமர் கார்னி ஒட்டாவாவில் நடைபெற்ற வெற்றியுரையில் கூறினார்.

கனடாவிற்கு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு எங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு நாங்கள் மீண்டும் போராடுவோம் என்றார்.

No comments