பலாலி வீதி திறப்பு - காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடவுள்ள மினிபஸ்கள்


எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும்,  யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும்.

கடந்த 10ஆம் திகதியன்று பலாலி வீதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்பட்ட நிலையில் குறித்த இரு வழித்தட சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments