ரணில் கைது:முடியுமா?


"ஜனாதிபதி அனுர துணிச்சலாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையோ, பசில் ராஜபக்ஷேவையோ அல்லது நாமல் ராஜபக்சவையோ கைது செய்வாரா என்பதைப் பார்க்க பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு பதிலாக அரசாங்கம் அவர்களின் சொந்த பொருளாதார பின்னணி கொண்ட உப்புச்சப்பற்ற அரசியல்வாதிகளைக் கைது செய்யவதாக சர்வஜன பலயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர சவால் விடுத்துள்ளார். அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்ற சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துவதாகவும் திலித் ஜெயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

"சாமர சம்பத் கைது செய்யப்படுவதற்காக பொதுமக்கள் காத்திருந்தார்களா? ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்!" என்றும் ஜெயவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

"அவர் கைது செய்யப்படமாட்டார்கள்.தொடக்கூட மாட்டார்கள்" என்றும்  ஜெயவீர ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஊழல் குற்றச்சாட்டில் சர்வஜன பலயவின் உறுப்பினரான எஸ்.எம். ரஞ்சித்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.

அதேவேளை, வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments