மருத்துவமனை படுக்கையிலிருந்து உலக அமைதிக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு
எல்லாவற்றிற்கும் மேலாக நான் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். போர் இன்னும் அபத்தமாகத் தோன்றுகிறது என்று இரட்டை நிமோனியாவுடன் போராடிவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உலக அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவரது வழக்கமான மக்கள் தோன்றி பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக எழுத்துபூர்வமான உரையை வழங்கினார்.
உலகெங்கிலும் உள்ள மோதல்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு 88 வயதான போப்பாண்டவர் கேட்டுக்கொண்டார். கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசு, உக்ரைன் , பாலஸ்தீனம், இஸ்ரேல், லெபனான், மியான்மர், சூடான் மற்றும் கிவு ஆகிய நாடுகளில் நடைபெறும் போர்களையும் மோதல்களையும் அவர் குறிப்பாகக் குறிப்பிட்டார்.
பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் இருக்கிறார்.
தொடர்ந்து மூன்றாவது வாரமாக, வத்திக்கான் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளைத் தலைமை தாங்குவதைத் திருத்தந்தை தவறவிட்டார்.
உலகின் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இருக்கிறார்.
அவரது உடல்நிலை குணமடைய பிரார்த்தனை செய்தவர்களுக்கும் ஆதரவு மற்றும் நல்வாழ்த்துச் செய்திகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் அமைதியான இரவைக் கழித்தார் என்று வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
போப் இன்னும் ஓய்வெடுக்கிறார் ஹோலி சீ தனது அண்மைய மருத்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து தேவாலயத்தை போப்த் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.
மார்ச் 2013 இல் அவரது போப்பாண்டவர் பதவி தொடங்கியதிலிருந்து , பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். மேலும், அவர் பொதுமக்களிடமிருந்து நீண்ட காலம் விலகி இருப்பது இதுவேயாகும்.

Post a Comment