விற்பனைக்கு சம்பூர்?
வெளிநாடுகளிற்கு இலங்கை மண்ணை விற்க அனுமதியோம் என களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி திருகோணமலையில் சூரிய மின்படலம் மூலமான மின் உற்பத்தி முதலீட்டிற்கு மோடிக்கு செங்கம்பள வரவேற்பினை வழங்குகின்றது.
அதற்கேதுவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவரது வருகையின் போது சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றில் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அதானி முதலீட்டு காற்றாலைகள் விவகாரம் முடக்க நிலையை சந்தித்துள்ளது.
ஆதானி இலங்கை முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அரசோ அதானியுடனான ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படவில்லையென கூறி வருகின்றது.
இந்நிலையில் இலங்கை வருகை தரும் மோடியுடனான சந்திப்பில் அதானி முதலீட்டு விவகாரங்கள் முக்கியத்துவம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment