பிலிப்பைன்ஸ் முன்னாள் தலைவர் டுடெர்டே ஐ.சி.சி பிடியாணையில் கைது
பிலிப்பைன்ஸில் போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது உத்தரவை அடுத்து, பிலிப்பைன்ஸ் காவல்துறை முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டை கைது செய்துள்ளது.
79 வயதான அவர் ஹாங்காங்கிலிருந்து மணிலா விமான நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மணிலாவின் இன்டர்போல் அமைப்புக்கு ஐ.சி.சி.யிடமிருந்து கைது வாரண்டின் அதிகாரப்பூர்வ நகல் கிடைத்தது என்று ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
79 வயதான முன்னாள் தலைவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அரசு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆதவராளர்கள் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டுடெர்ட்டே கைது செய்யப்பட்டதற்கு நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாட்டின் அதிபராகவும், அதற்கு முன்பு டாவோ நகர மேயராகவும் இருந்தபோது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கு நடவடிக்கையில் எடுத்திருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது 6,200 சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த நடவடிக்கையின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கைது நடவடிக்கையின் போது அவர் நான் என்ன குற்றம் செய்தேன் எதற்காக என்னைக் கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மணிலாவின் வில்லமோர் விமானப்படை தளத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள டுடெர்ட்டேவை அவரது மகள் வெரோனிகா டுடெர்ட்டே வெளியிட்ட காணொளியில் காணலாம். அதில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கேள்வி கேட்பதைக் கேட்கலாம்.
இந்த கைது நடவடிக்கையை டெர்ட்டின் முன்னாள் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ விமர்சித்தார். 2019 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் ஐ.சி.சி-யிலிருந்து விலகியதால் இக்கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறினார்.
பிலிப்பைன்ஸ் உறுப்பினராக இருந்து விலகுவதற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக, அந்த நாட்டில் அதிகார வரம்பு இருப்பதாக ஐ.சி.சி முன்பு கூறியது.
ஆனால் ஆர்வலர்கள் இந்தக் கைது நடவடிக்கையை அவரது போதைப்பொருள் போரில் இறந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஒரு "வரலாற்றுத் தருணம்" என்று அழைத்ததாக பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டணி (ICHRP) தெரிவித்துள்ளது.
மணிலா போதைப்பொருள் தொடர்பான இறப்புகளை மறுபரிசீலனை செய்ததால், செப்டம்பர் 2021 இல் தொடங்கப்பட்ட முறையான விசாரணை இரண்டு மாதங்களுக்குப் பின்னர்க இடைநிறுத்தப்பட்டது. ஆனால் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு பிலிப்பைன்ஸின் அதிகார வரம்பு ஆட்சேபனையை நிராகரித்ததை அடுத்து ஜூலை 2023 இல் மீண்டும் தொடங்கியது.
2022 ஆம் ஆண்டு டுடெர்ட்டேவுக்குப் பிறகு பதவியேற்ற ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மகள் சாரா டுடெர்ட்டேவுடன் கடுமையான அரசியல் மோதலில் சிக்கினார் , ஐ.சி.சி.யில் மீண்டும் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால், சர்வதேச காவல்துறையினர் டுடெர்ட்டைக் காவலில் எடுக்குமாறு ஐ.சி.சி. கேட்டால் ஒத்துழைப்பதாக மார்கோஸ் அரசாங்கம் கூறியுள்ளது. இது, உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குற்றச் சந்தேக நபரைக் கண்டுபிடித்து தற்காலிகமாகத் தடுத்து வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட மிகக் கொடூரமான சர்வதேச குற்றங்களுக்காக சந்தேக நபர்களை வழக்குத் தொடர நாடுகள் விரும்பாதபோது அல்லது முடியாமல் போனபோது நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள ஐ.சி.சி. வழக்குத் தொடர்ந்து தலையிட முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment