யாழில். மயங்கி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு
நெல்லியடி மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரான வடமராட்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தணிகைவேல் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வதிரியில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் , அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment