ரஷ்யாவில் குண்டு வெடிப்பு: துணை இராணுவக் குழுவின் தலைவர் கொல்லப்பட்டார்?
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு துணை இராணுவக் குழுவின் தலைவர் இன்று திங்கள்கிழமை காலை ரஷ்யாவின் தலைநகரில் மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிரெம்ளினில் இருந்து 12 கிமீ (7 மைல்) தொலைவில் உள்ள வடமேற்கு மாஸ்கோவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவு மண்டபத்தில் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் துணை இராணுவக் குழுவான "அர்பாட்" பட்டாலியனின் தலைவரான ஆர்மென் சர்க்சியன் கடுமையாக காயமடைந்தார். அத்துடன் அவரது மெய்ப்பாதுகாவலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அவரை அவசர சிகிற்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
காயமடைந்த துணை இராணுவக் குழுவின் தலைவர் தப்பியோடிய உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் உள்வட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், ரஷ்யாவில் கைதிகளை உக்ரைனுக்கு எதிரான போரில் போரிட ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், 2014 முதல் பல படுகொலைகளைச் செய்ததாகவும் அவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளதாகவும் உக்ரேனிய பாதுகாப்பு சேவையான எஸ்பியூ (SBU) கூறியது.
சர்கிசியன் மீதான படுகொலை முயற்சி கவனமாக திட்டமிடப்பட்டு உத்தரவிடப்பட்டது. புலனாய்வாளர்கள் தற்போது உத்தரவிட்டவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர் என்று ஒரு சட்ட அமலாக்க அதிகாரி கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கோர்லோவ்கா நகரில் சர்க்சியன் பிறந்தார்.
சர்க்சியன் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
பின்னர் ''Arbat" பட்டாலியன் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் தலைமைதாங்கி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment