யாழில் 100 கிலோ கஞ்சா மீட்பு: இருவர் கைது!
யாழ்ப்பாணம் குருநகர் தடாகத்தில் உள்ள மண்டித்தலை தீவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100 கிலோ 270 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை யாழ். பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பதில் காவல்துறை மா அதிபரின் உத்தரவின் கீழ், நாடளாவிய குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, பெப்ரவரி 5, 2025 அன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு இரகசிய தகவலின் பேரில், போதைப்பொருள் சரக்குகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Post a Comment