கரீபியன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்


நேற்று சனிக்கிழமை மாலை கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 130 மைல் (209 கிலோமீட்டர்) தொலைவில் கடலின் நடுவில் உள்ளூர் நேரப்படி (0123 GMT) மாலை 6:23 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது .

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு தென்மேற்கு  ஹைட்டியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து இப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும் என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

கேமன் தீவுகளின் அரசாங்கம் சமூக ஊடகங்களில் சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டது. குடியிருப்பாளர்கள் "உள்நாட்டிற்குள் சென்று தங்கள் பாதுகாப்பிற்காக உயரமான பகுதிகளுக்குச் செல்ல" கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments