ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: கட்டுப்பணத்தை இழந்தது நாம் தமிழர் கட்சி!


தமிழ்நாடு ஈரோடு கிழக்கு சட்டசபைக்கான இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழத்தின் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1.14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 

இவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதனால், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

கட்டுப்பணத்தை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி தனது கடுப்பணத்தை இழந்துள்ளது.

இந்த தேர்தலில், நோட்டாவுக்கு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


No comments