நாமலைச் சந்தித்த அமெரிகத் தூதுவர் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று வெள்ளிக்கிழமை (14) பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment