கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது


குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இந்நாட்டிற்கு வந்த  குற்றச்சாட்டில் இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து  2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த சந்தேகநபரும் அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 36 வயதுடைய ஹங்வெல்ல மற்றும் உடுகம்பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

 சம்பவம் தொடர்பில் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments