யாழ்மாவட்ட செயலர்?
யாழ்ப்பாணத்தில் பழித்துக்கொள்ளதக்க அதிகாரிகளுள் ஒருவர் மாவட்ட செயலர் பிரதீபன்.முன்னதாக அங்கயனின் அரவணைப்பில் வெற்றிடமான மாவட்ட செயலர் கதிரையில் ஒட்டிக்கொண்ட அவர் பின்னதாக டக்ளஸ் அணைவில் கதிரையை தமதாக்கி கொண்டார்.
இந்நிலையில் தற்போது சந்திரசேகரனுடன் ஜக்கியமாகி கதிரையை காப்பாற்ற பாடுபட்டுவருகின்றார்.
இந்நிலையில் அவரை தையிட்டி போராட்டக்குழு பச்சோந்தியென தெரிவித்து அம்பலப்படுத்தியுள்ளது.
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் மாவட்ட செயலருக்கு கடந்த வருட இறுதியில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.
இன் நிலையில் குறித்த விடயத்தை ஏன் ஜனாதிபதி முன்னிலையில் மாவட்ட செயலர் தெரிவிக்கவில்லை?
இவ்வளவு காலமும் குறித்த கடிதத்தை வெளிப்படுத்தாது மறைத்தது ஏன்? எனவும் காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post a Comment