சந்திரசேகரன் பின்கதவால் வந்தவர்!



அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு துணிவிருந்தால் பாராளுமன்றத்தில் கூறியதை அட்டன் பிரதேசத்திற்கு வந்து ஒரு தோட்டத்தில் கூறி பார்க்கட்டும். அவருக்கு மலையக மக்கள் சரியான பாடத்தை புகட்டி அனுப்புவார்கள்.மலையக மக்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர்.  என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலில் நாம் பேச வேண்டியதில்லை பதிலாக மக்களே பேசுவார்கள். எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் தோல்வியை ஆரம்பித்து வைக்கும். அமைச்சர் சந்திரசேகரும் அவருடைய தேசிய மக்கள் சக்தியினருக்கும் தைரியம் இருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு சபையாவது பிடித்துக் காட்டிவிட்டு வாய்ந்த சவடால் விடட்டும்.

அமைச்சர் சந்திரசேகரின் உரை மூலம் மக்களுக்கு பொய்களைக் கூறி அதன் மூலம் ஆட்சியைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி நாட்டை சர்வாதிகா முறையில் ஆட்சி செய்ய ஆரம்பிக்கின்றதா? என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

No comments