ஓமந்தையில் தொடருந்து தடம் புரண்டது


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான அதிவேக தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இன்று  ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 4 மணியளவில் தொடருந்தின் பெட்டி ஒன்று தடம் புரண்டதுடன், தொடருந்தை மீண்டும் தண்டவாளத்தில் பதிக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தொடருந்து தடம் புரண்டது இதுவாகும்.

No comments